திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனிநரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜூன் நம்பியார் (35). இவர் அரசு அனுமதி இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அர்ஜூன் நம்பியாரிடமிருந்து நாட்டு கை துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் செல்போனில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக தெரிவித்தார். இந்நிலையில் மேலும் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த நபர் கைது
- by Authour
