Skip to content

கரூர்… ரயில்வே ஸ்டேசன் நடைமேடையில் நடந்து சென்றவர் மயங்கி பலி

  • by Authour

கரூர் ரயில் நிலையத்தில் ஈரோட்டிலிருந்து திருச்சி செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நடை மேடையிலும், திருச்சியிலிருந்து சேலம் வரை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 3வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் முதலாவது நடைமேடையில் கையில் பார்சலுடன் சென்ற முதியவர் ஒருவர் தன்னுடன் நடந்து சென்றவர்களிடம் தன்னை பிடிக்கும்படி கூறிக்கொண்டே நிலை தடுமாறி மயக்கமடைந்துள்ளார். இதனை பார்த்த சக பயணிகளும், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவலர்கள் அவரை மீட்டு ஸ்டெச்சரில் படுக்க வைத்து முதலுதவி அளித்ததுடன், 108 ஆம்புலன்ஸை

வரவழைத்து அவரை பரிசோதித்தனர். அப்போது, அவர் உயிரிழந்து விட்டதாக ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர் தெரிவித்ததை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பெயர் சண்முக சுந்தரம் (வயது 58) என்றும் சேலம் மாவட்டம் பழைய சூரமங்களம் ராம் நகரை சார்ந்தவர் என தெரிய வந்தது. அவர் கரூரிலிருந்து சேலம் செல்வதற்காக ரயில் நிலையம் வந்தாரா, வேறு ரயில்களில் இருந்து கரூர் ரயில் நிலையம் வந்தாரா என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!