திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பெருமாள் வட்டம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 70 அடி ஆழம் 20 அடி தண்ணீர் கொண்ட விவசாய கிணற்றில் ஒரு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. அதை மீட்க கிருஷ்ணமூர்த்தியின் உறவினர் ஆசைத்தம்பி 52 கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை பாதுகாப்பாக மேலே அனுப்பினார்.
ஆனால் பின்னர் ஆசைத்தம்பி தனியாக மேலே ஏற முடியாமல் கிணற்றின் உள்ளே ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டார். இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
பின்பு தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு மற்றும் கைட் உதவியுடன் ஆசைத்தம்பி பாதுகாப்பாக மேலே கொண்டு வந்து உயிருடன் மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

