மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கப்படும் இடங்களாக 201 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உத்தரவிட்டிருந்தார். பல்வேறு அரசுத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பெயரில் நெடுஞ்சாலைத்துறை மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் ஆபத்தான மரக்கிளைகளை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை தருமபுரம் தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை நெடுஞ்சாலை துறையினர் மரம் அறுக்கும் கருவிகளைக் கொண்டு ஜேசிபி உதவியுடன் வெட்டி அகற்றினர். இந்தப் பணிகளை உதவி கோட்ட பொறியாளர் இந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்தனர்.
மரங்கள் முறிந்து விழும் அபாயம்…. நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டி அகற்றம்….
- by Authour
