Skip to content

மார்ச்-28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

திருச்சி மாவட்டத்தில் மார்ச் மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண் தொடர்புடைய கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும் விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!