தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் திராவிடம் 2.0, ஏன் எதற்கு, வெல்லட்டும் திராவிடம் வீழட்டும் பாசிசம் என்ற கருத்தரங்கு நடைபெற்றது.கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் திராவிட கழக துணை பொதுசெயலாளர் மதிவதனி, பேசுகையில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், பொது மக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திமுகவின் நல்லாட்சி குறித்தும் மேடையில் பேசினர்.மேலும் மேடையில் பேசிய மதிவதனி, என்றாவது

ஒருநாள் அதிமுக மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் உங்களது கல்வி உரிமைக்காக போராடியிருக்கிறதா. சிறுபான்மையினருக்கு எதிராக குடியுரிமை சட்டத்தை ஆதரித்த மோடி அரசுக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறுபான்மையினருக்கு ஆதரவாக குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தார் எனவும்,மேலும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடையே மு க ஸ்டாலின் கொண்டு சென்றார் எனவும்., வரக்கூடிய தேர்தல் வெறும் தேர்தல் அல்ல அது ஆதி திராவிட போர். உலகிலேயே சமத்துவ சிந்தனையோடு இருக்கும் பருவம் குழந்தை பருவம் தான் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

