திருச்சி பெரிய மிளகு பாறை, கள்ளர் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24)
இவர் மீது
பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.
இந்த கொலை முயற்சி வழக்கில் திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் மது போதைக்கு அடிமையான தினேஷ்,
இன்று காலையில் தனது வீட்டருகே உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் சம்பல இடத்திற்கு விரைந்து சென்று இறந்த தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

