விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டன. மயிலாடுதுறை சுற்று வட்டாரப்பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட 25 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் கோலகலமாக நடைபெற்றது. மின்னொளியால் அலங்கரிக்கபட்டு நான்கு சக்கர வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூம்புகார் கடற்கரைக்கு எடுத்து சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
மயிலாடுதுறையில் 195 விநாயகர் சிலைகள் நீர்நிலையில் கரைப்பு.
- by Authour

