மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த வீடட் ரோருக்கு 3 சென்ட் வீட்டு மனை, வீடு நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கிட வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி ஆண்டுக்கு 200நாள் வேலை வழங்க வேண்டும், நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலியாக உயர்த்தி தர வேண்டும், பேரூராட்சிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- by Authour
