Skip to content

10 வருடம் காதலித்த பெண் போலீசை காதலிப்பதாக கூறியதால்… வெளிநாட்டில் வாலிபர் தற்கொலை

10 வருடம் காதலித்த பெண் காவல் உதவி ஆய்வாளரை காதலிப்பதாக கூறியதால் வெளிநாட்டில் வேலை செய்யும் வாலிபர் தற்கொலை. ஏமாற்றிய காதலியிடம் பணம் நகையை திருப்பி கேட்டபோது காதலிக்கு ஆதரவாக மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், காதலியிடமிருந்து நகை பணத்தை மீட்டுதரக்கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் புகார் அளித்து கோரிக்கை:-

காதலிவீட்டார் குடும்பத்துடன் தலைமறைவு காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கும் மாற்றம்

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சரத்குமார்(29) இவர் குவைத் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு முன்னர் திருப்பங்கூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை

காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலி தற்போது வைத்திஸ்வரன்கோவில் காவல்நிலைய எஸ்.ஐ ஒருவரை காதலிப்பதாக கூறி தன்னை நிராகரிப்பதாகவும் வாழப்பிடிக்கவில்லை என்று பெற்றோருக்கு ஆடியோ மெசெஜ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் சரத்குமார் நேற்று குவைத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மணவாளன், தாய் சங்கீதா உறவினர்கள் ஊர்பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாய் சங்கீதா அளிந்த மனுவில் தனது மகன் சரத்குமார் வெளிநாடு செல்வதற்கு முன்பிலிருந்து 10 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணிற்கு 15 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணமும் அனுப்பியுள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவீட்டாரும் பேசினோம். இந்நிலையில் அந்த பெண் வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ சூரியமூர்த்தியை காதலிப்பதாகவும் தனது மகனை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் .தான் அனுப்பிய பணம் மற்றும் நகையை எனது மகன் திருப்பிகேட்டபோது எஸ்.ஐ சூர்யமூர்த்தி, காதலி, காதலியின் தாயார் தொலைபேசியில் வீடியோ காலில் பணத்தை திருப்பி தரமுடியாது என்று எனது மகனை மிரட்டியதால் குவைத்தில் மனமுடைந்த தங்கள் மகன் சரத்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன் மகனை 10 வருடமாக காதலித்து ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த காதலி மறறும் பொய் வழக்கு போடுவேன் என்று மிரட்டிய எஸ்.ஐ சூர்யமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன் சரத்குமார் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

error: Content is protected !!