Skip to content

சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்.45ஏ நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, திருக்கடையூரை அடுத்த சிங்கானோடை பகுதியில் கையகப்பட்ட பகுதியில் குடியிருப்புகளை இடித்து சாலைப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர். சிங்கானோடை, மாணிக்கபங்கு, ஆணைகோவில், செட்டிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 10,000-க்கு மேற்பட்ட மக்கள் வசித்துவரும் நிலையில், இவர்கள் அனைவரும் சிங்கானோடை சாலை

வழியாக திருக்கடையூர் வரவேண்டிய நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் நான்கு வழிச்சாலையை கடப்பதற்கு சப்வே அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சிங்கானோடை பகுதி மக்கள் கிராமச்சாலையில் நடைபெற்று வந்த சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்துவந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் உள்ள அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து கிராமமக்கள் அறிவித்து கலைந்து சென்றனர்.

error: Content is protected !!