ஆணவப் படுகொலைகளை தவிர்க்க திராவிடர்விடுதலைக் கழகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 இடங்களில் தெருமுனைக்கூட்டத்தினை நடத்தினர், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தி.வி.க. மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார், மதிமுக, விசிக., தபெதிக., தமிழர் உரிமை இயக்கம், போன்ற அமைப்பினர் சிறப்புரை ஆற்றினர். இதில் கலந்துகொண்ட தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் வரலாற்று ஆய்வாளருமான -ராசிரியர் ஜெயராமன் உரையாற்றும்போது, கடந்த காலத்தில் தொழில்சார்ந்த சாதியை காட்டி கல்விகற்க அனுமதிக்கவில்லை, ஆங்கிலேயர் 1835ல் பொதுக்கல்விமுறையை கொண்டுவந்து அனைத்து சாதியினரும் படிக்க அனுமதித்தானர். ஆங்கிலேயர் சட்டம் அமுலுக்கு வந்த 1861ற்குப் பிறகு வர்ணாசிரம விதிமுறைகள் விலகியது.
அனைவரும் படித்தார்கள் தங்களது குலத்தொழிலை விட்டுவிட்டு பல்வேறு தொழில் மற்றும் வேலைக்கு சென்றார்கள். முன்னேறினார்கள், ஆனால் தொழிலால் உருவான சாதியை தொழிலை மாற்றிய பிறகும் பிடித்துக் கொண்டு சாதி மாறி திருமணம் செய்தவர்களை தன் மகளது தாலி அறுத்தாலும் பரவாயில்லை என கொலை செய்யும் அளவிற்கு செல்வது எந்த விதத்தில் நியாம், சாதிதான் வேண்டும் என்றால் தனியாக தெருவை உருவாக்கி பழைய தொழிலுக்கே சென்றுவிடலாமே. நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது, இன்றைக்கு ஜனாதிபதி மாளிகை, பிரதம மந்திரி மாளிகை, பாதுகாப்புத்துறை, ஆளுனர்கள் போன்றவற்றில் பிராமணர்களே 90% கோலோச்சி வரும் நிலை உள்ளது, ஆகவே இல்லாத சாதியை தூக்கிப் போட்டுவிட்டு படித்து பதவிகளை அடையுங்கள் சாதியை விட்டொழியுங்கள் என்றார்.