Skip to content

விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12மணிவரையிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி கொள்ளிடம் திருவெண்காடு பூம்புகார் ஆகிய பகுதிகளில் 2மணிநேரம் கடையடைப்பு செய்துள்ளனர்.
செம்பனார்கோவில் ஆக்கூர், திருக்கடையூர் தரங்கம்பாடி, பொறையார் பகுதிகளில் மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு செய்ய உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!