Skip to content

கரூர் அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மாநகராட்சி மேயர்- ஆணையர்….

கரூர் அமராவதி ஆற்றில் நெகிழி கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி மேயர், ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி கழிவுகளை சேகரித்து அகற்றும் பணியினை 2025-ஆண்டு மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து கரூர் மாநகராட்சியில் கருப்பாயி கோயில் தெரு இறக்கம் அமராவதி ஆற்றுப்பகுதியில் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் பணியினை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் இன்று காலை

தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு அமராவதி ஆற்றில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர். இதில் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா, மாநகராட்சியின் மண்டல குழு தலைவர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!