தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பீகாரை சேர்ந்த பப்லு, மேற்கு வங்கத்தை சேர்ந்த சுனில் என்ற தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். கனகமாமிடி கிராமத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.