Skip to content

ரூ.40 கோடி கையாடல்: பால் நிறுவன அதிகாரி கொலையா?

ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி(37). திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​யில் உள்ள திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராகப் பணி​யாற்றி வந்​தார்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு-செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடை​பெற்​றிருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம்சாட்டப்பட்டது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு, அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடமாகக் கிடந்​தார். தகவல் அறிந்து புழல் போலீ​ஸார் சம்பவ இடம் சென்​று, நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், போலீ​ஸாரின் விசா​ரணைக்கு பயந்து நவீன் தற்​கொலை செய்து கொண்​டா​ரா? அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்​டன​ரா? என்​பது குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, நவீனின் குடும்​பத்​தினர் கூறும்​போது, ‘‘நேற்று முன்​தினம் நவீனை பார்க்க அவருடன் பணிபுரிந்த ஊழியர்​கள் இரு​வர் வந்​தனர். பணத்தை திருப்பி கொடுத்து விட்​டால் மட்​டும் சும்மா விட்​டு​விடு ​வோம் என நினைக்க வேண்​டாம். உன்னை எப்​படி​யும் சிறை​யில் தள்ளி விடு​வோம் என்று மிரட்​டினர். அதே​போல், போலீ​ஸாரும் கடும் நெருக்​கடி கொடுத்​த​தால் நவீன் இந்த முடிவை எடுத்​திருக்​கலாம்’’ என குற்​றம்​சாட்​டினர்.

இதுதொடர்​பாக சென்னை மாநகர காவல் ஆணை​யர் அருண் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாதவரம் திரு​மலா பால் நிறு​வனத்​தின் சட்ட மேலா​ளர் முகமது தமி​முல் அன்​சா​ரி, கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில், தங்​கள் நிறுவன நிதிப்​பிரி​வின் கரு​வூல மேலா​ள​ரான நவீன் பொலினேனி சுமார் ரூ.40 கோடி மோசடி செய்​த​தாக புகார் அளித்​தார். அது தொடர்​பான ஆவணங்​கள் மற்​றும் வங்கி கணக்கு பட்​டியலை சமர்ப்​பிக்க அறி​வுறுத்​தினோம். அவற்றை சமர்ப்​பிக்​காத காரணத்​தினால், புகார் மனு விசா​ரணை நிலை​யிலேயே உள்​ளது.

இந்​நிலை​யில், நவீன் நேற்று முன்​தினம் மாலை அவரது சகோ​தரி மற்​றும் திரு​மலா பால் நிறுவன மின்​னஞ்​சல் முகவரி​களுக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தகவல் அனுப்​பி​விட்டு தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார்.

அதில் காவல்​துறை​யினரை பற்றி எவ்​வித குற்​றச்​சாட்​டை​யும் அவர் தெரிவிக்​க​வில்​லை. இருப்​பினும் சமூக வலை​தளங்​களில் சிலர், கொளத்​தூர் துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனை தொடர்​புபடுத்தி செய்தி வெளி​யிட்​டுள்​ள​தால், இந்த விவ​காரம் தொடர்​பாக வி​சா​ரித்து அறிக்கை அளிக்க சென்னை மேற்கு மண்​டல காவல்​ இணை ஆணை​யர்​ திஷா மிட்​டலுக்​கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு காவல்​ ஆணையர்​ தெரிவித்​துள்​ளார்​.

 

error: Content is protected !!