Skip to content

அதிமுக கூட்டணியில்தான் ஓட்டை, உடைசல் உள்ளது”… அமைச்சர் கே.என்.நேரு

கடலூர் மேற்கு மாவட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம் காடாம்புலியூர் பகுதியில் நடைபெற்றது. பண்ருட்டி, நெய்வேலி, விருதாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், கழக முதன்மைச் செயலாளருமான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் நேரு, அரசின் சாதனைத் திட்டங்களை வீடு வீடாக கொண்டு செல்வது, நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து களமாடுவது, மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகளை பாக நிலை முகவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் நேரு, “அதிமுகவின் வைகைசெல்வன் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.எங்கள் கூட்டணி ஓட்டை எல்லாம் விழாது எனவே நீங்கள் வாயை பிளந்து கொண்டு காத்துக்கொண்டு தான் கிடக்க வேண்டும், பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அமித்ஷா கூறி வருகிறார். உங்களால் வெளிப்படையாக கூட்டணி ஆட்சி கிடையாது என்று அறிவிக்க முடியுமா? பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதை அதிமுக தொண்டர்களே விரும்பவில்லை. அதிமுக பலவீனம் ஆகிவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். நமது கழகத் தலைவர் கடந்த பத்தாண்டுகளாக நமது கூட்டின் கட்சியினரை அரவணைத்து உரிய மரியாதை தான் கூட்டணியை பலமாக வைத்துள்ளார், வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் மீண்டும் ஆட்சி அமைப்பது மட்டுமல்லாமல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தை திமுக தான் ஆட்சி புரியும்” என பேசினார்.

error: Content is protected !!