Skip to content

முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஸ்- முதல்வர் வாழ்த்து

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் முனைவர் (PhD) பட்டம் பெற்றுள்ளார். அதாவது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில்

Physical activities for skill development among school children using machine learning-ல் தனது ஆய்வை நிறைவு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இது தொடர்பாக அமைச்சர் மகேஸ்… X-தள பதிவில் கூறியதாவது, ”உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது” என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் மாண்புமிகு முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்! அதன்படி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021-ஆம் ஆண்டு முதல் “Physical Activity for Skill

Development Through Machine Learning” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தேன். அதன் வாய்மொழித் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் எனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு “முனைவர்” பட்டம் பெற்றுள்ளேன் என்பதைப் பெரு மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். முனைவர் பட்டம் பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு முனைவர் பட்டம் பெறும் இரண்டாவது அமைச்சர் அன்பில் மகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முனைவர் பட்டம் பெற்றார்.

கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எனது சொல்லை, எனது அமைச்சரவையிலும், குடும்பத்திலும் இருந்து கடைப்பிடித்திருக்கிறார் அன்பில் மகேஸ்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் – மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றிக் கொண்டே முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், பணிச்சுமை – நேரமின்மை – வயது ஆகியவற்றைக் கடந்து கல்விபெறத் துடிக்கும் அனைவருக்கும் ‘Role Model’ ஆகிவிட்டார்!” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!