Skip to content
Home » கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் தலைப்பில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது..

அதன் ஒருபகுதியாக திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் பிறதுறை செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 696 கூட்டுறவு நிறுவனங்களை சேர்ந்த உறுப்பினர்கள், ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று திருச்சியில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் கலந்துகொண்டனர்.  இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்..

அதில் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டதன் நோக்கம் ஏழை எளிய மக்களுக்கு உதவிட தான், இந்தியாவிலேயே முதன்முதலாக கடந்த 1904 ஆம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் மிக முக்கியமான துறை தான் இந்த கூட்டுறவு, இங்குள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும், உழைப்பும், தான் தமிழ்நாடு முதலமைச்சரின் 2030-ல் நாம் அமெரிக்க டாலரில் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அமைக்க முடியும். கூட்டுறவு சங்கங்கள் தான் இன்று பலரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உள்ளது. அதிலும் சுயஉதவி மகளீர் குழுக்களுக்கான கடன் உதவி தொகையை 12 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக முதல்வர் உயர்த்தி வழங்கியுள்ளார். அதேபோல் கூட்டுறவு துறைக்கான தனி நிதி ஒதுக்கீடு செய்து, கட்டிட

வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து, தனி அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கு இடையே இருக்கின்ற இணைப்பு பாலம் கூட்டுறவு துறை தான், எங்களுக்கு தபால்காரர்களே நீங்களே தான், எனவே இந்த துறையில் பணியாற்றும் அதிகாரிகள் நீங்கள் வழங்கிய கடன்களை வசூலிக்காத நிலையில், உயர் அதிகாரிகளிடம் இருந்து கடுமையான வார்த்தைகள் வரும் இருப்பினும் அது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் அல்ல நீங்களும் விருதுகளை பெற வேண்டும் என்பதற்காக தான், ஒன்று சேர்ந்து உழைத்தால் தான் தமிழக முதல்வர் கொண்டுவரும் திட்டங்களுக்கு நம்முடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாவட்ட கூட்டுறவு இணைபதிவாளர் ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!