Skip to content

சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில்  நேற்று  எதிர்பாராதவிதமாக சூறைக்காற்று வீசியதால் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த   வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள் சேதமடைந்தன.  இதுபற்றிய தகவல்அறிந்ததும்    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன்  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  இன்று  நேரில் சென்று பார்வையிட்டார்.  பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். சேத விவரங்கள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று  நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்த  நிகழ்ச்சியில்  திருவரங்குளம் மேற்கு ஒன்றிய திமுக. செயலாளர்  கே பி கே தங்கமணி உள்ளிட்ட திமுக. நிர்வாகிகள் , அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!