புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாலும், டிடிவி தினகரன் அல்லது ஓபிஎஸை சேர்க்க தயாரா என்பதில் தெளிவில்லை. இதனால் அதிமுகவில் ஒற்றுமை இல்லை என விமர்சித்தார். பியூஸ் கோயல் தமிழக அரசியல் நிலை அறியாமல் பேசுவதாகவும், அவரது முயற்சி வெற்றியடையாது என்றும் கூறினார்.

