அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து பேட்டி அளித்தார்.அப்போது அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருவதால் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைவோம் தமிழ்நாடு குறித்து விமர்சனம் செய்து வருகிறார்
மகளிர் உரிமைத் தொகையை எடப்பாடி பழனிச்சாமி நினைத்து இருந்தால் அவர் ஆட்சியில் இருக்கும் போது கொடுத்திருக்கலாம் தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் எடப்பாடி கூறுவார் ஆனால் செய்ய மாட்டார்
திமுகவை திட்டுவதற்காகவே பாஜகவின் மறைமுக ஆதரவோடு தொடங்கப்பட்ட கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம்
பாஜகவின் சி டீம் விஜய் என்று முதன் முதலில் நான் தான் கூறினேன் இப்போதும் அதை தான் உறுதியாக கூறுகிறேன் பாஜகவின் சீ டீம் தான் விஜய், அவரை பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
ஒன்றிணைவோம் தமிழகம் என்பது,திமுகவுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கே முதல்வர் தந்துள்ள சிறந்த திட்டம்.
ஒவ்வொரு வீடு தோறும் திமுக நிர்வாகிகள் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் இந்த ஆட்சியின் பயன்கள் குறித்து கேட்டறிந்து நீங்கள் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டு அதன் பின்பு OTP எண்ணை பெற்று அதற்குப் பிறகு அவர்களை உறுப்பினராக சேர்க்கும் திட்டம் தானே தவிர இது போலி உறுப்பினர் சேர்க்கும் திட்டமல்ல.
ஒவ்வொருவரும் மனம் உகந்து அரசின் பல்வேறு சாதனைகளை உணர்ந்து எங்களையும் திமுகவில் இணைத்துக் கொள்ளுங்கள்,நாங்களும் ஸ்டாலினுடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்காக பங்காற்ற விரும்புகிறோம் என்று கூறி மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் திட்டமாக இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எந்த ஒரு இயக்கத்திற்கும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதற்கான தைரியம் வேண்டும்.
ஒரே இடத்தில் இருந்து கொண்டு உறுப்பினர்களை சேர்ப்பது அந்த இயக்கத்திற்கு பலவீனம்.
எங்களிடம் பலம் உள்ளது, எடப்பாடி பழனிச்சாமி போல இது பலவீனமான திட்டமல்ல.
அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகின்ற காரணத்தினால்,
பரிதாபத்திற்குரிய பழனிச்சாமி எங்கள் திட்டத்தை விமர்சித்து பேட்டி தந்துள்ளார்.
மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஆட்சியோட திட்டங்களே சான்று.
அதனை எடப்பாடி பழனிச்சாமியால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
.எடப்பாடி பழனிச்சாமி நான்தான் முதலமைச்சர் என் தலைமையில் கூட்டணி என்கிறார்.
ஆனால் பாஜக தலைமை பேசி முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர்.
அங்கு முரண்பாடு அவ்வளவு உள்ளது.
பாஜவின் சி டீம் விஜய் என்று முதன் முதலில் நான் தான் சொன்னேன்.இப்போதும் நான் அதைத்தான் சொல்கிறேன்.பாஜகவின் சி டீம் தான் விஜய்,அவர்களைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
ஒன்றிணைவோம் தமிழ்நாடு திட்டத்திற்கு அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைந்துள்ளதால் பொதுமக்களே நாங்கள் வீடுகளுக்கு செல்லும் போது திமுகவில் இணைந்து கொள்கிறோம் என்று கூறி அவர்களாலே திமுகவில் இணைந்து கொள்கின்றனர்
இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக எடப்பாடி கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி இது தவறான குற்றச்சாட்டு
வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து கொண்டு செல்லப்படும் இயற்கை வளங்களுக்கு முறையாக வரி விதிக்கப்பட்டு வரி ரசீது இருந்தால் மட்டுமே வெளி மாநிலங்களுக்கு வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகிறது வரி ரசீது இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது
எடப்பாடி பழனிச்சாமி நான்தான் முதலமைச்சர் என்று கூறி வருகிறார் ஆனால் பாஜக கூட்டணி ஆட்சி என்று கூறி வருவதோடு யார் முதலமைச்சர் என்பதை அமித்ஷா முடிவு செய்வார் கூறி வருகின்றனர்,இதிலேயே அவர்கள் முரண்பாடு உள்ளது
திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே பாஜக பின்னணியில் இருந்து ஆரம்பிக்கப்பட இயக்கம்தான் தமிழக வெற்றி கழகம்
பாஜகவோடு மறைமுக கூட்டணி வைக்கக்கூடிய அவசியம் திமுகவிற்கு இல்லை.ஏற்கனவே பாஜக அதிமுக உடைய கூட்டணி என்று கூறிவிட்டது அதன் பின்னர் ஏன் நாங்கள் அதில் மூக்கை நுழைக்க வேண்டும்
எங்கள் கூட்டணி பலமாக உள்ளது
வெற்றிக் கூட்டணி 26லும். 31லும் ஆட்சியைப் பிடிக்கும் கூட்டணி எங்கள் கூட்டணி
நிச்சயமாக திமுக கூட்டணி 200க்கு மேல் வெல்லும், எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார்,
இவ்வாறு அவர் கூறினார்.