அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. உடல் நிலையை கருத்தில் கொண்டு அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் எம்.ஆர்ஐ. ஸ்கேன் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 28ம் தேதி(செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.