உலகத்திற்கு கொண்டு வந்தவர்களை மதிக்கத் தெரியாத அன்புமணி தமிழக அரசை குறை செல்ல தகுதி இல்லாதவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில் 13 மதிப்பெண்கள் தான் அளித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்த திட்டங்களை விட அறிவிக்கப்படாத திட்டங்கள் 50 சதவீதத்திற்கும் மேலாக நிறைவேற்றப்பட்டுள்ளன, மக்களுடைய தேவைகளைக் கேற்ப ஆர் கே நகர் விளையாட்டு அரங்கம் ஆர் கே நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் தேர்தல் அறிவிப்பிலே வராத திட்டங்கள். தேர்தல் அறிக்கை விட கூடுதலாக தேர்தல் அறிவிப்பில் இடம் பெறாத 50க்கும் மேற்பட்ட திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை ஒன்றியத்திலே முதன்மை மாநிலமாக வல்லமை படைத்தவர் தமிழக முதல்வர்
ஓயாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வருக்கு உதவியாக இருக்கின்ற நல்ல அரசியல் கட்சித் தலைவருக்கு உண்டான தகுதியில் எதுவுமே இல்லாதவர் அன்புமணி ராமதாஸ், அவர் கட்சித் தலைவராக அவர் என்ன மதிப்பெண்ணை கொடுப்பது, அவர் கட்சித் தலைவராக ஜீரோவாக தான் இருக்கிறார். உலகத்திற்கு வருவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களை மதிக்கத் தெரியாதவர்கள் மதிப்பெண்களை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை” என்றார்.