தமிழக முழுவதும் இன்று மொழிப் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மொழியாம் தமிழை காக்க, தன்னுயிர் ஈந்த கீழப்பழூர் சின்னசாமியின் திருவுருவ சிலைக்கு, அரியலூர் மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மரியாதை செய்தார். நிகழ்ச்சிகள்
அரியலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.