திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நடைபெற்றது இந்நிகழ்வில் 61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி,வடக்கு தெரு,TSM அவென்யூ ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் 240 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன்,மண்டலம்_2 கோட்டத் தலைவர் .ஜெய நிர்மலா,மற்றும் பகுதி
செயலாளர் . மணிவேல், மாமன்ற உறுப்பினர் ஜாஃபர் அலி,வட்டச் செயலாளர் சாமுவேல் ராஜா, திருச்சி கிழக்கு வட்டாட்சியர் .சக்திவேல் முருகன் மற்றும் பொதுமக்கள் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.