Skip to content

ஈரோடு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு….மமக தலைவர் பேட்டி

  • by Authour

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி தெற்கு மந்தை தெருவில் மனிதநேய மக்கள் கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பள்ளப்பட்டி நகர் மன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா மற்றும் கட்சியின் கொடி ஏற்று விழா, தமுமுக சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ் புதுப்பொலிவுடன் அர்ப்பணிப்பு விழா நிகழ்ச்சிகள் நடந்தது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜிவாஹிருல்லா,நகர்மன்ற உறுப்பினர் ஷாகுல் அமீது பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜிவாஹிருல்லா  நிருபர்களிடம்  கூறியதாவது:

நடப்பு நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மை மக்களுக்கான நிதி திட்டங்கள் 34 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கடந்த நிதி ஆண்டில் ரூ.365 கோடி தரப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டில் 44 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கல்வியில் பின் தங்கியுள்ள சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகை விதியை குறைப்பது, பாஜக அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை காட்டுகிறது.

பாஜகவில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியாக அதிமுக உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்காமல் பாஜக அரசுக்கு எதிராக துணிந்து செயல்படும், திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் நிதியையும் பாஜக அரசு குறைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பது தேவையான ஒன்று. ஆனால், அதே நேரம் சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்துக்களைக் கேட்டு, ல் பேனா நினைவு சின்னத்தை அமைக்க வேண்டும்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்களை கடந்து ராகுல் காந்தி சென்ற யாத்திரை இந்திய அரசியல் வரலாற்றில் புதுமையான ஒன்று. இதுவரை எந்த அரசியல் தலைவரும் இப்படி ஒரு யாத்திரை நடத்தியதில்லை. அதே நேரம் இந்த யாத்திரை அரசியலுக்கானது அல்ல. இது ஒற்றுமைக்கான யாத்திரை. ராகுல் காந்தி நடத்திய யாத்திரை மதச்சார்பற்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. எதிர்க்கட்சியினர் அனைவரும் ஓர் அணியில் இணைந்தால் நிச்சயமாக பாஜகவை வீழ்த்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!