சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நமது பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று அவர் சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து பேசினார். கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய-சீனா எல்லையான கல்வான் பகுதியில் இந்தியா-சீனா ராணுவனத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் சீனா அதிபரை சந்திக்கும் நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி தவிர்த்து வந்தார். இடையேயான தாக்குதலுக்கு பின் முதல்முறையாக சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடதக்கது.
5 வருடங்களுக்கு பிறகு மோடி-ஜின் பிங் சந்திப்பு
- by Authour
