Skip to content

தேர்தல் வந்தாலே மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம்- அமைச்சர் கடும் தாக்கு

தேர்தல் வந்தாலே தமிழ்நாட்டின் மீது மோடிக்கு பாசம் வந்துவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட நாட்கள் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டனர். விவசாயிகள் போராட்டத்திற்கு காரணமாக இருந்தது மோடி அரசுதான். 3 வேளாண் சட்டங்களை பழனிசாமி கண்மூடித்தனமாக ஆதரித்தார். மோடி என்ன செய்தாலும் அதனை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி.

விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு விவசாயிகள் பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை. மோடி ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேர்தல் வந்தாலே தமிழ்நாட்டின் மீது மோடிக்கு பாசம் வந்துவிடும். விவசாயிகளை பாதுகாத்து வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கேஸ், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கேஸ், பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மோடி ஆதரவாக இருக்கிறார். கேஸ் சிலிண்டருக்காக மக்கள் தத்தளிக்கும் நிலை உருவாகி உள்ளது. பெட்ரோல், எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் மோடி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

error: Content is protected !!