Skip to content

கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஷ் (வயது 20). இவர் வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மர்ம நபர் ரூபாய் 500 பணம் பெற்றார் சர்வேஷ் கொடுக்க மறுத்தார் உடனே அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காண்பித்து மிரட்டினார்.
இதுகுறித்து சர்வேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர் விசாரணையில் கைதானவர் குளித்தலை கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்கிற பிரகாஷ் ராஜ் ( 24 ) என்பது தெரிய வந்தது.

போலி பாஸ்போர்ட் வைத்திருந்த சிங்கப்பூர் பயணி கைது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது.
அதைத் தொடர்ந்து இமிகிரேஷன் அலுவலர் அருள் ஜோதி பயணிகளின் ஆவணங்களை சோதனைக்கு உட்படுத்தினார். அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாதவன் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 51) என்பவர் தனது பெயர் பெற்றோர்களின் பெயர்கள் மற்றும் முகவரியை மாற்றி போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் பெற்றிருந்தது தெரிய வந்தது அதை தொடர்ந்து அருள்ஜோதி கொடுத்த புகாரின் அடிப்படையில்
ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மயங்கி விழுந்த சாவு

திருச்சி பொன்மலை , மேல கல்கண்டார் கோட்டை நாகம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜா பசீர் (வயது 68) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் இவர் பாலக்கரை மேலப்புதூர் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றார் மேலபுதூர் பகுதியில் உள்ள டீக்கடை முன்பு வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஹாஜா பசீர் இறந்து விட்டதாக கூறினர் இது பற்றி அவரது மனைவி சையது நிஷா பாலக்கரை போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிஸ்டோமேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் மோடம் பட்டி மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பு 33 இவர் ஊதுபத்தி வியாபாரம் செய்து வந்தார். திருச்சியில் பல்வேறு இடங்களில் வியாபாரம் செய்துவிட்டு அரிஷ்ட மேம்பால பகுதியில் வந்தார் அப்போது மேம்பாலத்திலிருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார் இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பல அளிக்காமல் அன்பு பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது சகோதரர் பேபி கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டவுடன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தனியார் நிறுவன மேலாளர் மனைவி திடீர் தற்கொலை

திருச்சி கே.கே.நகர் மாதவன் சாலை அட்சயா அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் அனில். இவர் பெரம்பலூரில் உள்ள பிரபல டயர் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி ரீனா (47 )இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் ஒருவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார் மற்றொருவர் ஐ.ஐ.டியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் சமீபகாலமாக ரீனா மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் வழக்கம் போல் அணில் காலையில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார் பின்னர் வீட்டில் தனியாக இருந்த ரீனா யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது குறித்து அணில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பெண் பலி 

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் இவர் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி தேன்மொழி மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த மின் வயரை தொட்டதாக கூறப்படுகிறது இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலக்ட்ரீசியன் மயங்கி விழுந்து சாவு

திருச்சி பொன்மலை திருநகர் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன்
( 48). எலக்ட்ரீசியன் மதுவுக்கு அடிமையான இவர் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார் உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தானகிருஷ்ணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மோகன பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!