மகன் வீட்டிற்குச் சென்ற தாய் திடீர் மாயம்..
திருச்சி, புத்தூர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.இவரது மனைவி அனுஸ்யா (58), சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து இளைய மகன் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. மீண்டும் அங்கிருந்து நாகப்பட்டினத்தில் அவர் வேலை செய்த இடத்திற்கு சென்றதாக தெரிகிறது. அங்கிருந்து திருச்சி புறப்பட்ட அனுஸ்யா மாயமானார். இது குறித்து புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மாடியில் இருந்து தவிறி விழுந்து எலக்ட்ரீஷியன் சாவு
திருச்சி மேல சிந்தாமணி, காவேரி நகரை சேர்ந்தவர் ராபர்ட் க்ளைவ் (34). எலக்ட்ரீஷியன் மதுபழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தினசரி மதுபோதையில் வீட்டிற்கு வந்து 2 -வது மாடியில் உள்ள தண்ணீர்தொட்டி மேல் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவத்தன்று எதிர்பாராத விதமாக அவர் மாடியில் இருந்து தவறி தரைத்தளத்தில் விழுந்து, அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஜெயம் அமிர்தவள்ளி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி,இ.பி. சாலை, சத்திய மூர்த்திநகரை சேர்ந்தவர் அய்யப்பன்.இவரது மனைவி அமுதா . இவர்களுக்கு வசந்தகுமார் (24) என்ற மகன் உள்ளார். இவர் 12ம் வகுப்பு படித்து விட்டு சிறு வேலைகள் செய்து வந்தார், மதுபழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் அமுதா அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, மேல சிந்தாமணி, எஸ்எஸ் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முககுமார் (30), டீ மாஸ்டர், மதுபழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த 1 வாரமாக இவர் வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது தாய் பானுமதி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
திருச்சி காவிரி பாலம் அருகே கிடந்த 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் திருச்சி, காவிரி பாலம் ஓடத்துறை அருகே அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகா ரோந்து சென்றார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது தெரிந்தது. இது குறித்து பாலாம்பிகா அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் சடலத்தை பறிமுதல் செய்து அது யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
இறுதி ஊர்வலத்தில் வெடிவெடித்து வியாபாரி காயம்
திருச்சி, வடக்கு காட்டூர், வேணுகோபால் நகரை சேர்ந்தவர் முகமது சலீம் (72). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். நேற்று அப்பகுதி வழியாக இறுதி ஊர்வலம் வந்தது. அதில் 2 பேர் வேட்டு வெடி வைத்தனர். இதை சலீம் கண்டித்தார். இருந்தும் அவர்கள் வெடி வைத்தனர். இதில் எதிர்பாராத விதமாக வெடி முகமது சலீம் மீது வெடித்தது. இதில் காயமடைந்த முகமதுசலீம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து வெடிவைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
