Skip to content

குடிகார மகனை கொன்ற தாய்… நெல்லையில் பரபரப்பு

நெல்லை கிருஷ்ணாபுரம் கலைக்கோவில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா (56). இவரது மகன் மாயாண்டி (27). மாயாண்டி தனது தந்தையோடு சேர்ந்து கறிக்கடை நடத்தி வருகிறார். மாயாண்டிக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாயாண்டியின் சகோதரி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் மாயாண்டிக்கு அவரது பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்திருக்கின்றனர். ஆனால் எந்த பெண்ணும் கிடைக்கவில்லை. இதனால் விரக்த்தி அடைந்த மாயாண்டி அடிக்கடி மது குடித்து வந்து வீட்டில் உள்ள குடும்பத்தினரிடம் தகராறு ஈடுபட்டு வந்திருக்கிறார். நேற்று இரவு வழக்கம் போல் அதிகம் வகுப்பறையில் வீட்டிற்கு வந்த மாயாண்டி தனது சகோதரி மற்றும் தாய் லதாவை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்.

இதனால் வேதனை அடைந்த தாய் லதா இப்படி பேசுவதற்கு என்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடு என்று வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாயாண்டிக்கு கொடுக்க முயன்றுள்ளார். கத்தியை வாங்குவதற்கு மாயாண்டி வேகமாக தாய்லதாவின் அருகே வந்திருக்கிறார். அந்த நேரத்தில் தாய் லதா ஆத்திரமடைந்து மகன் மாயாண்டியை உடலில் 5 இடங்களில் கத்தியால் சரா மாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகன் இறந்ததை அறிந்து கொள்ளாத லதா உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவர் இது தொடர்பாக சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சிவந்திபட்டி காவல்துறையினர் கலை கோவில் நகர் பகுதிக்கு நேரடியாக வந்து பார்த்தனர் அப்பொழுது லதா தனது மகன் மாயாண்டியை குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.

உடனடியாக இறந்த மாயாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆத்திரத்தில் மகனை கொலை செய்த லதாவை சிவந்திபட்டி போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் போது லதா தனது மகனுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்ததால் மது போதை குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். பெற்ற ஒரே மகனை நானே கொலை செய்து விட்டேனே என்று கண்ணீர் வடித்து காவல்துறையினரிடம் வேதனை தெரிவித்துள்ளார். நெல்லையில் பெற்ற தாயே மகனை கொலை செய்திருக்கும் அதிர்ச்சி சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

error: Content is protected !!