Skip to content

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்..

தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர்.பின்னர் சினிமா படங்களில் நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் தான் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ரோபா சங்கர் தற்போது சென்னையில் புதிய படப்பிடிப்பில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது அவர் திடீரென்று மயங்கி உள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பின்போது ரோபா சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. மருத்துமவமனையில் ரோபா சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!