Skip to content

மும்பையில் தொடர்ந்து கன மழை: அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்

  • by Authour

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்து வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலத்திலும் தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. மும்​பை​யில்  கடந்த 1 வாரமாக  தொடரும்  கனமழை காரண​மாக  எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக  காட்சி அளிக்கிறது. குறிப்பாக  தமிழர்கள் அதிகம் வசிக்கும்   தாராவி, செம்பூர் , மட்டுங்கா, சைன் , பாரெல் பகுதிகளிலும்  மழை  கொட்டிவருகிறது.

மழை காரணமாக  போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  பல  இடங்களில் தண்டவாளங்களில் வெள்ளம்  கரைபுரண்டு ஓடுகிறது.   விடாத மழை காரணமாக அரசு அலு​வலங்​கள், தனி​யார் நிறு​வனங்​களை மூட உத்​தரவு பிறப்பிக்கப்பட்​டுள்​ளது. மேலும் தங்​களது ஊழியர்​களை வீட்​டிலிருந்தே பணி​யாற்​று​மாறு தனி​யார் நிறு​வனங்​கள் கேட்​டுக் கொண்​டுள்​ளன.

மேலும் முக்​கிய சாலை சந்​திப்​பு​களில் வெள்​ளம் சூழ்ந்து நிற்​ப​தால் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மக்​களின் இயல்பு வாழ்க்கை முற்​றி​லும் முடங்கி உள்ளது. மும்பை உட்பட மகா​ராஷ்டி​ரா​வின் பல்​வேறு பகு​தி​களில் அடுத்த 2 நாட்​களுக்கு கனமழை நீடிக்​கும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் எச்​சரிக்கை செய்​துள்​ளது. கனமழை காரண​மாக மும்​பை​யில் உள்ள அனைத்து பள்​ளி​கள் மற்​றும் கல்​லூரி​களுக்கு விடுமுறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் வெளியூர் செல்பவர்கள்  தங்​களது பயணத்தை தள்​ளிவைக்​கு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​பட்​டுள்​ளனர். இதுதொடர்​பான உத்​தரவு மும்பை பெரு மாநக​ராட்​சி(பிஎம்​சி) பிறப்​பித்​துள்​ளது. நேற்று காலை 8 மணி​யுடன் முடிந்த 24 மணி நேரத்​தில் மும்பை நகரம், கிழக்​கு, மேற்கு புறநகர் பகு​தி​களில் முறையே 186.43, 208.78, 238.19 மில்​லிமீட்​டர் மழை பதி​வாகி​யுள்​ளது.

நகரின் பல்​வேறு பகு​தி​களில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்​டர் வரை காற்று வீசக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரித்​துள்​ளது.  தாதர், மட்டுங்கா,  சைன்  பகு​தி​களில்  ரயில்வே தண்​ட​வாளங்​களில் மழை வெள்ளம் தேங்கி நிற்​ப​தால் ரயில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. புறநகர் ரயில் சேவை​யும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. பல  ரயில்​கள் தாமத​மாக இயக்கப்பட்டன.   பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அடைமழை காரணமாக ஒட்டுமொத்த மும்பை மாநகரமே 2 தினங்களாக முடங்கி கிடக்கிறது.

error: Content is protected !!