இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சகேஷ் (68), உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சபேஷ் காலமானார். பொக்கிசம், மிளகா, இம்மை அரசன் 23ம் புலிகேசி, கோரிப்பாளையம் போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு
இசையமைத்துள்ளனர். சகோதரர் மரணத்தால் வௌிநாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சபேஷின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. தேவாவின் சகோதரர் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியானது.