கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகாவில் உள்ள பஸ்தாவாடா கிரா மத்தை சேர்ந்தவர் மெகபூப். இவரது மனைவி நூர்ஜன். இந்த தம்பதி யின் பக்கத்து வீட்டில் தங்களது பெற்றோருடன் சோமசேகர் பூஜர், வசந்த் பூஜர் வசித்து வந்தனர்.
20 ஆண்டுகளுக்கு மன்பு சோமசேகர்-வசந்த் ஆகியோரின் பெற்றோர் திடீரென உயிரிழந்தனர். அப்போது சோமசேகருக்கு 4 வயது, வசந்துக்கு 2 வயது ஆகும். ஆனால் அவர்களை குடும்பத்தினர் யாரும் வளர்க்க முன்வரவில்லை. இதனால் மெகபூப்-நூர்ஜன் தம்பதி மனிதநேயத்துடன் சோமசேகரையும், வசந்தையும் தத்தெடுத்து வளர்த்தனர்.
இதில் சிறப்பு அம்சம் என்னவென் றால், மெகபூப்-நூர்ஜன் தம்பதிக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். இருப்பி னும் சோமசேகர்-வசந்த் ஆகியோரையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இருவரும் இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி மெகபூப்-நூர்ஜன் கட்டாயப்படுத்த வில்லை.

வேறு மதத்தை சேர்ந்த அண்ணன்- தம்பியை தத்தெடுத்து இந்து பாரம்பரிய முறைப்படி வளர்த்து, கல்வி உள்பட அனைத்து வகை யிலும் அவர்கள் மேம்பட அந்த தம்பதி உதவினர். இந்த நிலையில் மெகபூப்-நூர்ஜன் தம்பதி சோமசேகருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி இந்து சமுதாயத்திலேயே ஒரு பெண்ணை பார்த்து பேசி சோமசேகருக்கு நிச்சயத்தார்த்தம் செய்து வைத்தனர். மேலும் நேற்று முன்தினம் சோமசேகருக்கும், அந்த பெண்ணுக்கும் இந்து முறைப்படி மெகபூப்-நூர்ஜன் திருமணம் செய்து வைத்தனர். அத்துடன் இந்து மத சடங்குகளையும் அவர்களே முன்நின்று செய்து திருமணத்தை செய்து வைத்தனர். சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நடைபெற்று வரும் இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோரை இழந்த நிலையில் தத்தெடுத்து வளர்த்த மகனுக்கு இந்துமுறைப்படி திருமணம் செய்து வைத்த முஸ்லிம் தம்பதி மெகபூப்- நூர்ஜனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.