முத்தரையர் வாக்குளை குறி வைத்து “ஐ.பி.எஸ்சை” களம் இறக்கும் பாஜ..

583
Spread the love

திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக முத்தரையர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இன மக்களின் வாக்குகளை கருத்தில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திருச்சி மாவட்டத்திற்கு பெரும் பிடுகு முத்தரையர் பெயரும், சிலையும் வைக்கப்பட்டது. இதன் பலனாக முத்தரையர் இன  வாக்குகளை அதிமுக அறுவடை செய்தது. ஆனால் கடந்த 2 தேர்தல்களாக அதிமுகவிற்கு மட்டும் முத்தரையர் வாக்குகள் இல்லை என்கிற வகையில் திமுகவும் முத்தரையர் இன வாக்குளை பெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சி வயலுாரில், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 9வது மாநில செயற்குழு கூட்டம், இன்று திருச்சி வயலூரில் நடைபெறவுள்ளது. அதில், பாஜ துணைத்தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை ஒட்டி முத்தரையர் இன வாக்குகளை பெறும் வகையிலான முயற்சியின் முதற்கட்டமாக இக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க கட்சி மேலிடம் அனுமதி வழங்கியுள்ளதாக கருதப்படுகிறது. வீர முத்தரையர் முன்னேற்ற கழகம் என்பது முத்தரையர் சமுதாயத்தில் இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள அமைப்பாகும். முத்தரையர் சமுதாய இளைஞர்களை குறி வைத்து பாஜ மேற்கொண்டுள்ள முயற்சி பலனை கொடுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY