Skip to content

இளையராஜாவை ”அவன் இவன்” என பேசிய மிஷ்கின்….. நடிகர் விஷால் காட்டம்…

  • by Authour

பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. விழாவில் பேசிய மிஷ்கின் “நான் ஒரு குடிகாரன்..எனக்கு மிகப்பெரிய போதை இளையராஜா..இளையராஜா ஒன்று ஒருத்தன் இருக்கிறான். நான் குடித்து விட்டால் அவர் தான் சைடிஸ். அவர் தான் பலரும் குடிக்க காரணம் எனவும் சில கெட்ட வார்த்தைகளையும் மேடையில் பேசினார்.

மிஷ்கின் பொது மேடையில் இப்படி பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், நடிகர்கள் பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் விஷால் சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது மிஷ்கின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். இது தொடர்பாக பேசிய அவர் ” எதாவது பேசிவிட்டு மன்னிப்பு கேட்பதே மிஷ்கினுக்கு வேலையாப்போச்சு. மேடை நாகரீகம் என ஒன்று இருக்கிறது.

மேடையில் கெட்ட வார்த்தை போட்டு பேசக்கூடாது என்பது கூட தெரியாதா? சில பேருடைய குணம் இப்படி தான் இருக்கும். அவர்களுடைய குணத்தை என்ன செய்தாலும் மாற்றவே முடியாது . ஆனால், இளையராஜா சாரை அவன் இவன் என்று பேசுவதற்கு யாருக்கும் அதிகாரம், அருகதை கிடையாது. இளையராஜா என்பவர் கடவுளுடைய குழந்தை. அவருடைய இசையில் பலரும் மன வருத்தத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள்.

இளையராஜா என்பவர் ஒவ்வொருவருடைய ரத்தத்தில் கலந்த ஒருவராக இருக்கிறார். அப்படி ஒரு மனிதரை அவன் இவன் என்று பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவரை பற்றி யார் அப்படி பேசினாலும் நான் கண்டிப்பேன்” எனவும் விஷால் சற்று காட்டத்துடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்களும், இளையராஜாவின் ரசிகர்களும் மிஷ்கினை கண்டித்தும் மன வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!