கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் 10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளது.
இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வரை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மகாலிங்கம் மற்றும் ஓட்டுநர் ஜெயக்குமார் இருவரும் ஓய்வறையில் தங்கி இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் உள்ளே புகுந்த நிலையில் அவர்களுடைய இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் மற்றும் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் இடம் இருந்தும் 3 மொபைல் போன்கள் என மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
பின்பு பாதிக்கப்பட்ட மக்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து இது போல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளதாகவும் இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

