நாகை அருகே வடக்கு பால் பண்ணை சேரி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து நாசமானது இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட திமுக செயலாளருமான கௌதமன் இன்று காலை பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு
பாதிக்கப்பட்ட தினேஷ்குமார் தனபால் சாதிக் பாஷா பாண்டியன் ஜோதி ஆகியோருக்கு ஆறுதல் கூறி தலா 10,000 வீதம் ஆறு பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.இந்த நிகழ்வின்போது நாகை நகர் மன்ற தலைவரும் நாகை நகர திமுக செயலாளருமான மாரிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்