தமிழக அரசியலில் நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ள செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
100 வயதைக் கடந்த நிலையிலும் மக்கள் பணிகளுக்காக ஓயாமல் உழைத்த இந்த மாபெரும் தலைவர் நல்லகண்ணு.. தற்போது முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்..
நல்லகண்ணு உடல்நிலை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஆஸ்பத்திரியில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.. தொடர் சிகிச்சை நடந்து வரும் நிலையில் நேற்று மாலை திடீரென உடல் பின்னடைவை சந்தித்தது.. இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்.. ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் பேசும்போது மிகுந்த உருக்கமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.. உடல்நிலை கவலைக்கிடம் தோழர் நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், மருத்துவர்கள் தங்களால் இயன்ற அளவு கடுமையாகப் போராடித் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.. இருப்பினும் அவரது உடல்நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பது தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது..

