நாம் தமிழர் கட்சி உண்மையாக உழைத்த தொண்டர்களை மதிப்பதில்லை – நாதக திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு திருச்சியில் பேட்டியில் கூறியதாவது…
கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால் முடிந்த அனைத்தையும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்தோம். அதற்கு உரிய மதிப்பில்லை.
எதற்கெடுத்தாலும் என் கட்சி, என் கட்சி என சீமான் பேசுகிறார். சீமான் மட்டுமே நாம் தமிழர் கட்சியை வளர்த்தாரா? ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் எங்கே போவது?
தமிழ்தேசியம், தலைவர் பிரபாகரனை நேசித்து இந்த கட்சிக்கு வந்தோம். தற்போது, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகம் சரியில்லை. கட்சி அலுவலகம் ஆயிரக்கணக்கான நபர்களின் உழைப்பில் வந்தது. அதை தனி நபரின் பெயரில் பத்திரம் செய்துள்ளனர். கட்சிக்கான சட்ட, திட்டம் எதுவும் இல்லை. உழைக்கும் தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை என இவ்வாறு தெரிவித்தார்.