Skip to content

புதுப்பட்டினம் கடற்கரையில் தேசிய மாணவர் படை சார்பில் தூய்மை பணி

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை (NCC ARMY WING) சார்பில் ”புனீத் சாகர் அபியான்” ( ‘Puneet Sagar Abhiyan’) எனும் கடற்கரைகளை பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பொருட்களிலிருந்து தூய்மையாக்குவதற்கான நிகழ்ச்சி அதிராம்பட்டினம் அருகில் உள்ள புதுப்பட்டிணம் கடற்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்

லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படையினை சார்ந்த சுமார் 100 மாணவ/ மாணவிகள் கலந்து கொண்டு கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அகற்றி புதுப்பட்டிணம் ஊராட்சியில் கொடுத்தனர். மேலும் கடற்கரைகளை சுத்தமாக

வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் கும்பகோணம் 8 தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் சேது மாதவன், சுபேதார் மேஜர் பாலசந்திரன் மற்றும் கல்லூரி முதல்வர் (பொ) அல்ஹாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியினை தேசிய மாணவர் படை அலுவலர்கள் லெப்டினன்ட்.முனைவர். சி. அப்பாஸ் மற்றும் S/ O அமீர் காசிம் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

error: Content is protected !!