Skip to content
Home » தேசிய அளவில் தடகள போட்டி…. அகமதாபாத் செல்லும் திருச்சி வீரர்-வீராங்கனைகள்…

தேசிய அளவில் தடகள போட்டி…. அகமதாபாத் செல்லும் திருச்சி வீரர்-வீராங்கனைகள்…

  • by Senthil

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் 14 வயது மற்றும் 16 வயதுக்குட்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டி தேசியளவில் மிகப்பெரிய தடகளப் போட்டிகளில் ஒன்றாகும்.

இந்த தடகள போட்டியில் இந்திய முழுவதும் உள்ள சுமார் 600 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் திருச்சி மாவட்டத்தில் ஐனவரி 17ம் தேதி திருச்சி மாவட்ட தடகள சங்கம், காடோ லினியம் அறக்கட்டளை சார்பில் நடந்த போட்டியில் இருந்து 13 வீரர்- வீராங்கனைகள் தேர்ந்ததெடுத்துவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் (12.02.24) நேற்று திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

3 நாட்கள் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பில் தடை தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், டிரையத்லான், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

அவர்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலர் ராஜூ, பொருளாளர் ரவிசங்கர், உதவி செயலாளர் கனகராஜ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நீலமேகம், பயிற்சியாளர், உறவினர்கள் உள்பட பலர் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!