அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில் :
திமுகவில் வருவோர் போவோரை எல்லாம் கூட்டணியில் சேர்க்கிறார்கள் ஜெயலலிதா காலத்தில் பல உயர் பதவிகள் வகித்து பொருளாதார ரீதியாக பலமாகி அரசியலிலிருந்து காலாவதியானவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். இப்படி தங்களுடைய கட்சியிலும் கூட்டணிகளும் சேர்த்து விட்டு நாங்கள் பலமாக இருக்கிறோம் என திமுகவினர் கூறுகிறார்கள். ஏற்கனவே நாங்கள் பலமாக கூட்டணி அதனால் தான் கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றோம் என கூறும் திமுகவினர் மீண்டும் கூட்டணியில் கட்சிகளை சேர்த்து பலமாக வேண்டிய அவசியம் இருக்கிறது இதற்கு காரணம் இந்த ஆட்சி மேல் மக்களுக்கு பெரிய அதிருப்தி இருப்பது தான்.
2011 தேர்தலுக்கு முன்பு மக்களிடம் அதிருப்தி இருந்தது ஆனால் அது வெளியில் தெரியவில்லை தேர்தல் முடிவில் தான் தெரிந்தது அதுபோல்தான் இந்த தேர்தலிலும் தெரிய வரும் மக்கள் ஒரு அமைதிப் புரட்சியை வரும் தேர்தலில் செய்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள்.
கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகளை கேட்பதால்தான் தொகுதி பங்கீடு தள்ளி போகிறதா என்கிற கேள்விக்கு அது போல் இதுவரை எதுவும் நடக்கவில்லை தொகுதி பங்கீடு குறித்து சுமூகமாக பேசி உரிய நேரத்தில் அறிவிப்போம் நாங்கள் அனைவரும் நட்புடன் தான் இருக்கிறோம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கால தாமதமாகவதால் பல கேள்விகள் எழுகிறது ஆனால் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது எடப்பாடி பழனிச்சாமியும் அமிர்தாஷாவும் பேசி சுமூகமாக உரிய நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து முடிவை அறிவிப்பார்கள்.
தொகுதி பங்கீடு என்பது மிகவும் முக்கியமான விஷயம் 8 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருக்கும் திமுக காங்கிரஸ் இடையே கூட தொகுதி பங்கின் போது சலசலப்பு ஏற்பட்டது அது போல் எதுவும் நடக்காமல் நாங்கள் உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம்.
இரட்டை எஞ்சின் என்பதை தவறாக பரப்புகிறார்கள் ஜெயலலிதா கூட மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட்டுள்ளார் ஆனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய இயலாமையின் காரணத்தால் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார் இரட்டை இஞ்சின் என்பது தமிழ்நாட்டில் அதிமுக எஞ்சின் இருக்கும் அது சிறப்பாக செயல்பட மத்திய அரசங்கர மற்றொரு இன்ஜின் உதவி செய்யும்.
திமுக என்பது டப்பா இஞ்சின் திருட்டு இஞ்சி டுபாக்கூர் இஞ்சி மக்களை ஏமாற்றக்கூடிய இன்ஜின்.
திமுக அரசு தேர்தல் அறிவிப்பு எதையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள் அதை செய்யவில்லை சட்டம் ஒழுங்கு சரியில்லை பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. 76 இல் தமிழ்நாட்டு மக்கள் எப்படி திமுகவிற்கு பாடம் புகட்டினார்களோ அதே போல் தற்பொழுதும் புகட்டுவார்கள்.
கொரோனா என்கிற கடுமையான சூழ்நிலை நாம் எதிர்கொண்டது போல் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாம் எதிர் கொள்ள வேண்டும் இந்திய மக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என பிரதமர் பேசியுள்ளார் விரைவாக எரிபொருள் தொடர்பான பிரச்சனையை அவர்கள் சரி செய்வார்கள்.
விஜய் கூட்டணியில் இணைவார் அதற்காகத்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளி போகாவதாக கூறுவது யூகமான கேள்வி அவருக்காக காத்திருக்கவில்லை அதனால் பேச்சுவார்த்தையும் தள்ளிப் போகவில்லை
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புலக்கம் அதிகரித்துள்ளது இதனால் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது இதை திமுக அரசாங்கம் தட்டிக் கேட்கப் போவதில்லை மே மாதத்தில் இந்த மக்கள் விரோத ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்து ஜெயலலிதாவின் ஆட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியாக தமிழ்நாட்டில் வரும் என்றார்

