நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ளது மேலபாப்பாக்குடி. இங்கு நேற்று இரவு இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்று உள்ளார். போலீசார் தற்காப்புக்காக சுட்டனர். அப்போது 17வயது இளைஞரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மோதல் ஏற்பட்ட பகுதியில் கோவில் கொடை திருவிழா நடந்து வருகிறது. இந்த விழா தொடர்ாக மோதல் ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள். தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குண்டு காயம் பட்ட சிறுவன் உள்பட 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.