Skip to content

30 நாள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியிழப்பு- மக்களவையில் புதிய மசோதா இன்று தாக்கல்

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா  மக்களவையில் இன்று  கீழ்கண்ட 3  மசோதாக்களை தாக்கல் செய்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன. குறிப்பாக கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  மத்திய  பாஜக அரசுக்கு  கூட்டணி ஆதரவுடன் மெஜாரிட்டி  இருப்பதால்  இந்த  மசோதாவை எப்படியும் இந்த  கூட்டத்தொடரில் நிறைவேற்ற  மத்திய அரசு  தீவிரமாக உள்ளது.

h

error: Content is protected !!