Skip to content

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படம்..

நடிகர் யோகி பாபு யோகி என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார் .அதன் பின்னர் அவர் பெயர் யோகி பாபு என்று மாறியது .அதன் பின்பு மண்டேலா படத்தில் ஹீரோவானார் .அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமடி பாத்திரத்தில் நடித்தாலும் அவ்வப்போது ஹீரோவாக நடித்து வருகிறார் ,இப்போது அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது  சமீபத்தில் ரவி மோகன் அவரது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில் ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார். மேலும் அடுத்ததாக ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.அவர் இயக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு Ordinary Man என்ற தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை  படக்குழு வெளியிட்டுள்ளது  . இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

error: Content is protected !!