Skip to content

39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

திருச்சி மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் திறந்துவைத்தார். மாமன்ற உறுப்பினர் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல். ரெக்ஸ், தனது அலுவலகத்தில் பெரும்பகுதியினை, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இ-சேவை மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அறையினை அர்ப்பணித்தார். இந்நிகழ்வில், மண்டலம் – 3 கோட்ட தலைவர் மதிவாணன், காங்கிரஸ் ராஜா டேனியல் ராய், அழகர், அருள், சிவா வைத்தியநாதன், பூபாலன், பெரியசாமி, அண்ணாதுரை, சுப்புராஜ், திமுக பகுதிச்செயலாளர்கள் சிவா, நீலமேகம், வட்ட செயலாளர்கள் செல்வராஜ், வினோத் கனகராஜ், மதன், ரவி, சந்திராஜ், சரோஜா, ரோஸ்லின் சாமிநாதன், சூரியநாராயணன், வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

error: Content is protected !!