Skip to content

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையில், இரவு நேர மின்சார ரயில் சேவை நாளை (செப். 5 ) மற்றும் செப். 7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  அதன்படி இன்று இரவு 12.30 மணி முதல் அதிகாலை  5.30 மணி வரை  பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதாகவும், இதேபோல் செப்.6 மற்றும் செப்.8ம் தேதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாலும் அன்றைய தினங்களிலும் இரவுநேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பதி – காட்பாடி இடையிலான மெமு ரயில்கள் இரு மார்க்கத்திலும் செப்.5 (நாளை) மற்றும் செப்.7,8,9 ஆகிய முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.  இதேபோல் திருப்பதியிலிருந்து காலை.7.35 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயிலும், அதேபோல் மறுமார்க்கத்தில் காட்பாடியில் இருந்து இரவு 11.21 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் மெமு பயணிகள் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!